tamilnadu

img

இந்தியப் பொருளாதாரம் தேறுவது சந்தேகம்..

புதுதில்லி:
நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுவது, நிச்சயமில்லை என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் அபாயச் சங்கு ஊதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும்கூறியிருப்பதாவது:பொதுமுடக்கத்தை நாம் அமல்படுத்தியபோது ஏப்ரல் தொடக்கத்தில் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி என்பது 1.5 முதல் 2 சதவிகிதமாக இருக்கலாம் என நிதி அமைச்சகம் மதிப்பிட்டது. பொருளாதார வளர்ச்சி மீண்டு எழுவதன் அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டின் 2-ஆவது பகுதியில்அல்லது அடுத்த ஆண்டில் பொருளாதாரம் மீட்சி அடையுமா?  என்பது குறித்து நிச்சயமற்ற நிலைதான் இருக்கிறது.அனைத்துவித சூழ்நிலை களையும் பரிசீலித்து பொருளாதார நிலைமை குறித்து தொட ர்ந்து மதிப்பிட்டு வருகிறோம். பொருளாதார மீட்சி ஏற்படா மல் போனால் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி என்பது நடப்பாண்டில் குறைவாகவே இருக்கும். 2-ஆவது காலாண்டில் பொருளாதார மீட்சி இருந்தாலும் அது குறிப்பிட்ட அளவானதாகத்தான் இருக்கும்.இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

;