tamilnadu

img

தொடர் சரிவில் இந்தியப் பொருளாதாரம்... வளர்ச்சிக் குறியீடான பிஎம்ஐ 50க்கும் கீழே போனது

புதுதில்லி:
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே, இந்தியப் பொருளாதாரம் சரிவில் போய்க் கொண்டிருக்கிறது. 2016-இல் பிரதமர் மோடி திடீரென அறிவித்த பணமதிப்பு நீக்கம், 2017-இல் அவசர கதியில் அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழிற்துறைகளை மட்டுமன்றி, கனரகத் தொழில்களையும் மிகமோசமாக பாதித்தது. வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 8 சதவிகிதத்தை எட்டியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 4.5 சதவிகிதமாக குறைந்தது. 

இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் அதனையொட்டி மார்ச் மாதம் அமலுக்கு வந்த பொதுமுடக்கம், இந்திய பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கி அதலபாதாளத்திற்கு தள்ளியது. மொத்தஉள்நாட்டு மதிப்பானது, வளர்ச்சிக்குறைவு என்பதிலிருந்து மைனஸூக்கு போனது.ஆனால், பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பின்னரும், பொருளாதாரம் பெரிய அளவிற்கு மீட்சி பெறவில்லை; சரிவிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை, பிஎம்ஐ எனப்படும் இந்தியாவின் உற்பத்திக்கான (Purchasing Managers’ Index - PMI) குறியீடு உறுதிப்படுத்தி இருக்கிறது.பிஎம்ஐ குறியீட்டுப் புள்ளிகள் 50-க்கு மேல் இருந்தால், ஒருநாடு வளர்ச்சியில் இருப்பதாக கணக்கிடப்படும்.அந்த வகையில், பிஎம்ஐ புள்ளிகள், பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 2020-இல், வரலாறு காணாத அளவில், 27.4 புள்ளிகளுக்கு இறங்கியது. அதன்பின்னர் கடந்தஜூன் 2020 மாதத்தில் 47.2 புள்ளிகளுக்கு வந்தது. ஆனால், தற்போது2020 ஜூலையில் 46 புள்ளிகளாக மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது என்று தரமதிப்பீட்டு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ (IHS Markit) தெரிவித்துள்ளது.வரும் மாதங்களிலும், பிஎம்ஐதொடர்ந்து கீழ் நோக்கிப் போவதற்கான சாத்தியங்களே உள்ளதாகவும், இது அவுட் புட் & புதிய ஆர்டர்களில் தெரிவதாகவும் கூறியுள்ள ஐஎச்எஸ் மார்க்கிட், “இந்திய உற்பத்தித் துறையில் புதிய ஆர்டர்கள்தொடர்ந்து 4-வது மாதமாக சரிந்துஇருக்கிறது. தொழிலாளர்கள் கிடைக்காமை, மூலப் பொருட்கள்விநியோகச் சங்கிலியில் ஏற்பட் டுள்ள சிக்கல் ஆகியவை இந்திய உற்பத்தித் துறைக்கு புதிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்க பிரச்சனையால், இன்னும் பல கம்பெனிகள் & நிறுவனங்கள் ஆர்டர் கிடைக்காமல் போராடிக் கொண்டு இருக்கின்றனர்; கொரோனா தொற்றுப் பரவல் முடிவுக்கு வந்து, கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் அதுவரை உற்பத்தியில் ஒரு முன்னேற் றத் தைப் பார்க்க முடியாது என்று ‘ஐஎச்எஸ் மார்கிட்’ நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் எலியட் கெர் தெரிவித்துள்ளார்.ஒருவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதுமேற்கொண்டு புதிய பொதுமுடக் கங்களைக் கொண்டு வரும். அது இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கும் உற் பத்தித் துறை மீட்சிக்குப் பெரிய தடையாக இருக்கும் என்றும் எலியட் கெர் எச்சரித்துள்ளார்.

;