புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு அனுமதியளிக்கு மாறு, அந்நாட்டிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்தது.இதனால் கடந்த 4 மாதங்களாக, இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்லாமல், வேறு பாதையில் சுற்றிச்சென்று வருகின்றன. இதனால் கூடுதல் எரிபொருள் செலவும்,காலவிரயமும் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஜூன் 13, 14 தேதிகளில் கிர்கிஸ்தானில் நடை பெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடியும், 8 மணிநேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்தும் பட்சத்தில் 4 மணி நேரத்தில் அவர் சென்றுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே நேர விரயத்தைத் தவிர்க்க, பாகிஸ்தான் வான்பரப்பில் மோடியின் விமானத்தை அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.