tamilnadu

img

இந்தியா-பாக். அணுசக்தி நிலையங்களின் பட்டியல் பரிமாற்றம்

புதுதில்லி,ஜன.1- 1988 ஆம் ஆண்டு ஒப்பந்தப் படி அணுசக்தி  நிலையங்களின் பட்டியல்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கை தொடர்பாக, அணுசக்தி நிலையங்களின் பட்டியல்களின் பகிர்வு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நடைபெறும். போர் ஏற்பட்டால் கூட அணுசக்தி நிலையங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடாது என்ற அடிப்படையிலும், விபத்து தவிர்ப்பு அடிப்படையிலும் அணு சக்தி நிலையங்களின் பட்டி யல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. புதுதில்லியில் உள்ள பாகிஸ் தான் தூதரக அதிகாரியிடம் இந்திய அதிகாரிகள் இந்தப் பட்டி யலை ஒப்படைக்க, இஸ்லாமா பாத்தில் இந்திய தூதரக அதி காரியிடம் பாகிஸ்தான் அதிகாரி கள், அவர்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய விவரங்களை ஒப்படைத்தனர். 29-வது ஆண்டாக தற்போது அணு சக்தி நிலையங்கள் பட்டியலை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டுள்ளன.

;