tamilnadu

img

பொருளாதாரத் தேக்கத்தில் இந்தியா.. ஐஎம்எப் அமைப்பே சொல்லி விட்டது

புதுதில்லி:
இந்தியா குறிப்பிடத்தகுந்த பொருளாதாரத் தேக்க நிலைகளுக்கு இடையில் இருப்பதாக, பன்னாட்டு நாணய நிதியமான ஐ.எம்.எப். அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக திங்களன்று வாஷிங்டனில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,“உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டிருந்தாலும், சமீபத்திய தொழிலாளர் சந்தைத் தரவுகளின் படி வேலையின்மை கடுமையாகஅதிகரித்துள்ளது. உழைப்புச் சந்தை பங்கேற்பு என்பது கடுமையாக சரிந் துள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் வேலையின்மை அதிகரித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின்மையினால் இந்தியாவின் இளம் உழைப்புச்சக்திகள் வீணடிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. அரசுக் கட்டுப்பாடுகளில் எந்த ஒரு நிச்சயமும் இல்லாததால் முதலீடும், நுகர்வுச் சக்தியும் சரிந்துள்ளது”என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.கார்ப்பரேட் வரிக்குறைப்பினால் வரிவருவாயில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்களில் தாமதம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியை, சரிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருப்பதாக கூறியுள்ள ஐ.எம்.எப்.,குறிப்பிட்ட இலக்கை நோக்கிய வளர்ச்சியை எட்டும் வரையிலும் இந்தியா தன்நிதிக்கொள்கையில் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையை வெளியிட்டுப் பேசிய, ஐ.எம்.எப்.பிற்கான இந்தியத் தலைவர் ரணில் சல்காடோ, “வங்கிகள் அல்லாதநிதி நிறுவனங்களின் கடன் விரிவாக்கச் சரிவு, பரந்து பட்ட அளவில் கடன் அளிப்பதில் இருக்கும் இறுக்கம் மற்றும் உள்ளார்ந்த  சீர்த்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றான தேசம் முழுவதற்குமான சரக்குமற்றும் சேவை வரி அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் பொருளாதார தேக்க நிலைக்கு முக்கியக் காரணங்கள்” என்று கூறியுள்ளார்.

;