tamilnadu

img

இந்தியா - பாகிஸ்தான் வான்வெளி தடைகள் நீக்கம்

புதுதில்லி:
 பாலகோட் தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானங்களை வான்வெளியில் அனுமதிக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியில் தடை விதித்தது.
இந்நிலையில், 140 நாட்கள் கழித்து இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டி ருந்த தடையை பாகிஸ்தான் அரசு நீக்கி யுள்ளது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்திய அரசும் நீக்கியுள்ளது. இதனால் தெற்காசியாவில் விமானப் போக்குவரத்து சீராகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில், “இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் அனைத்து கட்டுப்பாடுகளும் நீங்கியுள்ளன. மூடப்பட்ட விமான வழித்தடங்களில் விமானங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன. இது விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் அனுமதிக்கப்படாததால் ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச விமானங்கள் மாற்று வழிகளில் சுற்றிப் பயணிக்க வேண்டிய நிலை உருவானது. இதனால் ஏர் இந்தியாவுக்கு ரூ.491 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பாகிஸ் தான் அரசின் தடை நீக்கத்தால் ஏர் இந்தியாவுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;