tamilnadu

img

ஒவ்வொரு இந்தியர் தலையிலும் கூடுதலாக ரூ. 24 ஆயிரம் கடன் மோடியின் 5 ஆண்டு சாதனை

புதுதில்லி, மே 2- கடந்த 5 ஆண்டு ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் கூடுதலாக தலா 24 ஆயிரத்து 300 ரூபாய் கடன்சுமையை பிரதமர்நரேந்திர மோடி ஏற்றி வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங்சுர்ஜேவாலா மேலும் கூறியிருப்பதாவது:2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம்இந்திய அரசின் ஒட்டு மொத்த கடன்தொகை 53 லட்சத்து 11 ஆயிரத்து81 கோடி ரூபாயாக இருந்தது. இது2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 83 லட்சத்து 40 ஆயிரத்து26 கோடி ரூபாக உயர்ந்துள்ளது. இந்தக் கடன் தொகை விவரங் களை இந்திய அரசு எங்கும் வெளியிட முன்வரவில்லை.இந்திய அரசு வெளியிட்ட கடன்பத்திரங்களை திரட்டி அவற்றின் கடன் தொகைகளை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் கூட்டினர். அதில்தான்கடன் தொகையின் மொத்த மதிப்பு83 லட்சத்து 40 ஆயிரத்து 26 கோடிஎன்று தெரியவந்துள்ளது.இந்த ஒட்டு மொத்த தொகை கொஞ்சம் குறைவானது என்றும் காங்கிரஸ் நிபுணர்களின் கணக் கில் இருந்து 7 லட்சத்து 16 ஆயிரத்து 700 கோடி ரூபாய் விடுபட்டுள்ளது என்று பெயர் வெளியிடவிரும்பாத அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கணக்கில் விடுபட்டஅந்தத் தொகையும் சேர்த்தால் அரசின் ஒட்டு மொத்த கடன் தொகை 90 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என கூறப்படுகிறது.இந்த உயர்வு காரணமாக இந்திய குடிமகனின் தனி நபர் கடன்தொகை - 2014-ஆம் ஆண்டு- 40 ஆயிரத்து 854 ரூபாயிலிருந்து 64 ஆயிரத்து 154 ரூபாயாக உயர்ந் துள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என நாட்டை நாசம் செய்த பாஜக அரசு, இந்திய அரசை மீண்டுவர முடியாத கடன்சுமையிலும் தற்போது தள்ளி உள்ளது.கடன் சுமை உயர்ந்துள்ள காரணத்தால், அந்தக் கடனுக்கு வட்டிகட்டவே புதிதாக கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

;