tamilnadu

img

இந்த 5 விஷயங்களை செய்தால் பொருளாதாரம் முன்னேறும்...

புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் 2019-20 நிதி நிலை அறிக்கையை, எதிர்க்கட்சிகள்தான் விமர்சித்தன என்றால், அக்கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியசாமியும் எதிர்க்கட்சிகளோடு கைகோர்த்துக் கொண்டார்.தனது பொருளாதார அறிவை, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளே மெச்சும்போது, தன்னை விட்டு விட்டு, அருண் ஜெட்லியையும், நிர்மலா சீதாராமனையும் நிதியமைச்சராக்குவதா? என்ற கடுப்பில், பாஜக அரசின் வண்ட வாளங்களை எடுத்து வீசினார்.“இந்தியப் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பைத் தொட 55 ஆண்டுகள் ஆனது; இன்று நாம் 3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு, “இந்தியப் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலரைத் தொட எந்த ஆண்டில் இருந்து, எந்த ஆண்டு வரை 55 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது..? மே 26, 2019-இல் தான் இந்தியப் பொருளாதாரத்தில் 1 ட்ரில்லியன் டாலர் அதிகரித்ததா..? இப்போது 3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்களே.. அப்படி என்றால் மே 26, 2019-இல் இருந்து வெறும் 6 வாரத்தில், இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு இன்னும் ஒரு ட்ரில்லியன் டாலர் அதிகரித்து விட்டதா...?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை, சுப்பிர மணியசாமி எழுப்பினார்.அதேபோல, “ஜிடிபி கணக்குப்படி உலகிலேயே 6-ஆவது பெரிய பொருளாதார மாக இந்தியா இருக்கிறது; வாங்கும் திறன் அடிப்படையிலான ஜிடிபி-யின் படி பார்த்தால் ஏற்கெனவே இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறது” என்று கூறியதையும் விடவில்லை. “இந்த இரண்டில் ஒன்றுதானே சரி. இரண்டுமே சரியாக இருக்க முடியாதே” என்று சுப்பிரமணியசாமி ‘செக்’ வைத்தார்.

“விவசாயிகளுக்கான வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்று மத்திய அரசு கூறியதையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சுப்பிரமணியசாமி, “2022-க்குள் இதைச் செய்வோம் என்றால், ஆண்டுக்கு 18 சதவிகிதம் கூட்டுவட்டி விகிதத்தில் விவசாயிகள் வருமானம் அதிகரித்தாக வேண்டுமே.. இது நல்ல கனவுதான்” என்றும் கிண்டலடித்தார்.ஒரு கட்டத்தில், பிரதமர் மோடி தன்னை பயன்படுத்திக் கொள்ள மறுப்பதாக பகிரங்கமாகவே கூறிய அவர், வெளிநாட்டுபேராசிரியர் பணிக்கே திரும்பப் போவதாகவும் தெரிவித்தார்.ஆனால், தற்போது மோடி அரசு கேட்டுக்கொள்ளாமலேயே, “நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான 5 வழிகள்” என்று இலவச ஆலோசனை யை சுப்பிரமணியசாமி வழங்கியுள்ளார்.“1. தனிநபர் வருமான வரியை ஒழிக்கவேண்டும்; 2. முதன்மை கடன் விகிதத்தை 9 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும்; 3. வங்கி காலவைப்பு விகிதத்தை 9 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்; 4. பெருநிறுவன ஊழியர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்; 5. உள்கட்டமைப்பை வலுப்படுத்த தாராளமான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட வேண்டும்” - இவையேஅந்த 5 வழிகள் என்று சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

;