tamilnadu

img

இந்துத்துவத்தை கைவிட மாட்டேன்

மும்பை:
“நான் இன்னும் இந்துத்துவ நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். அது என்னிடமிருந்து பிரிக்கமுடியாதது” என்று மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிரத்தில், சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. முன்னதாக இக்கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டது. அதன் முகவுரையில் “அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மையை உறுதிசெய்ய கூட்டணிக் கட்சிகள் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. மேலும், “தேசிய மற்றும் மாநில விவகாரங்களில், குறிப்பாக மதச்சார்பின்மைக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் விஷயங்களில் மூன்று கட்சிகளும் கலந்தாலோசித்த பின்பே முடிவு எடுக்க வேண்டும்” என்றுகுறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் சிவசேனா சார்பில் தாக்கரேவும் என்சிபி சார்பில் ஜெய்ந்த் பாட்டிலும் காங்கிரஸ் சார்பில் பாலாசாகேப் தோரட்டும் கையொப்பமிட்டிருந்தனர்.மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கு முன்னதாக, உத்தவ் தாக்கரேவும், ‘மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் வழங்குவேன்’ என்று உத்தரவாதம் அளித்திருந்தார். இந்நிலையிலேயே இந்துத்துவ நிலைப்பாட்டை நேற்றும் பின்பற்றிக்கொண்டிருந்தேன். இன்றும் நாளையும், இனி வரும் காலங்களிலும் இதையே தொடர்வேன் என்று உத்தவ் தாக்கரே திடீரென சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

;