tamilnadu

img

ஃபார்மா சாதனங்கள் பற்றாக்குறை : செங்கல்பட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன வசதியை பயன்படுத்த பி.ஆர் நடராஜன் எம்.பி கோரிக்கை

ஃபார்மா சாதனங்கள் பற்றாக்குறை உள்ள நிலையில்  செங்கல்பட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன வசதியை பயன்படுத்த கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசின் மருந்துகள் துறை செயலர் அவர்கள் மருத்துவ சாதனங்கள் பற்றாக்குறை பற்றி எச்சரித்துள்ளார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

முரண்பாடு என்னவென்றால் ஒருபுறம் சாதனங்களின் பற்றாக்குறை உள்ளது. மறுபுறம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள ஒரு பொதுத்துறை  நிறுவனம் கோவிட்-19 ஐ கண்டறிவதற்குத் தேவையான சாதனங்களைத் தயாரிப்பதற்காக அனைத்து திறன்களும் கொண்டிருந்தும், அந்த வசதியை தமிழக அரசு மற்றும் இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே.  நெருக்கடி நேரத்தில் பொதுநிதி வசதி பயன்படுத்தப்படாமல்  பிரயோஜனமின்றி வைக்கப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் உள்ள இந்த நிறுவனத்திற்கு தேவையான உரிமம், போதுமான நிதி அளித்து எல்லாவகையான ஆதரவும் தந்து, இந்த பொதுத்துறை நிறுவனத்தை முடிந்த அளவு  முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இந்திய அரசு உறுதியுடன் முன்வர வேண்டும். HLL லைஃப் கேர் லிமிட்டெட் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான, HLL பயோடெக் லிமிட்டெட் (HBL) என்ற நிறுவனம் உள்ளது. இது நடப்பு பொருட்கள் தயாரிப்பு முறைகளோடு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி வளாகத்தை சென்னைக்கு அருகில் செங்கல்பட்டில் உருவாக்கியுள்ளது.

செங்கல்பட்டிலுள்ள இந்த நிறுவனம், நல்ல உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.மொத்தம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், உள்ள இந்த நிறுவனம், சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டுள்ளது.
கோவிட் 19 ஐ எதிர்த்து, போராடத் தேவையான, கை சுத்திகரிப்பான்கள் மற்றும் வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியா மற்றும் R&D ,ஆகியவற்றுடன் இவர்கள் முழுமையாக உதவுகிறார்கள்.

ஆல்கஹால் மூலப்பொருளைக் கொண்டு, கிருமி நாசினியை மாதத்திற்கு 20000 லிட்டர் தயாரிப்பதற்கான உரிமத்தை HBL பெற்றுள்ளது. அவர்கள், 6000 லிட்டர் hand sanitizers களை கேரள அரசிற்கு வழங்கியுள்ளனர். இந்த மத்திய அரசின் பொதுத்துறை முயற்சியை, இந்திய அரசும் , தமிழ்நாடு அரசும் முழுமையாக பயன்படுத்தவும் ஊக்குவிக்கவும் வேண்டும்.

கோவிட் 19 பாஸிட்டிவ் எண்ணிக்கை, தினமும் உயர்ந்து கொண்டுள்ளது. இந்திய அரசு, உலக சுகாதார அமைப்பு ( WHO), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), ஆகிய ஒவ்வொருவரும் , இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராட, கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதலை வலியுறுத்துகின்றனர்.வைரஸ் போக்குவரத்து ஊடகம் (VTM), எப்படி இருக்கிறது என்பதை, HBL அறிந்திருக்கிறது.
இது சம்பந்தப்பட்ட உரிமத்திற்கான இந்நிறுவனத்தின் விண்ணப்பம் ,இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகளிடம், நிலுவையில் உள்ளது. தொற்று நோய் தாக்கியதாக சந்தேகப்படும் நபர்களிடமிருந்து, மாதிரிகள் (ஸ்வாப்) , எடுப்பதற்கும், ஆய்வகங்களுக்கு, கண்டறிதல் சோதனைக்காக (RT-PCR) , கொண்டு செல்வதற்கும், இந்த VTM, மிக முக்கியமானது. கோவிட்19 ஐ எதிர்க்கும் போராட்டத்தில் இது நீண்ட தூரம் செல்கிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR), மற்றும் இந்திய அரசின் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், ஆகியவற்றின் ஆதரவு HBL நிறுவனத்திற்கு தேவைப்படுகிறது. நன்கு நிறுவப்பட்ட, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால், கோவிட்19 ஐ எதிர்க்கத் தேவையான நோய் எதிர்ப்புத் திறன், BCG தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடம் அதிகமாக உள்ளது, (உதாரணம்..ஜப்பான்) 
BCG தடுப்பூசி போடப்படாத நபர்களின் இந்த நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளது. உதாரணம்..இத்தாலி ஏற்கனவே, யூனிவர்சல் இம்யூனைசேஷன் திட்டத்தின் ( UIP) கீழ், இந்தியா, தமிழ்நாட்டின் கிண்டியில் உள்ள, BCG தடுப்பூசி ஆய்வகத்தால், தயாரிக்கப்பட்ட , BCG தடுப்பூசிகளை, ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் பிறக்கும் 25 மில்லியன் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.
HBL நிறுவனம், 100 மில்லியன் BCG அளவுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.இது தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பிடமிருந்து, சோதனை கையாளுதல்
(Test manufacturing license) உரிமத்தை, பெற்றுள்ளது. இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேவையான நிதி உதவியுடன், மருத்துவ சோதனை மற்றும் ஆராய்ச்சி, அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்படலாம்.

இந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு, தேவையான உரிமம், போதுமான நிதி மற்றும் கிடைக்கக்கூடிய வசதியை உகந்த உத்தம அளவில்  பயன்படுத்துவதற்கான,அனைத்து ஆதரவும் வழங்கப்படுவதை,
உறுதி செய்யுமாறு , இந்திய அரசிடம், நான்,மனதாரக் கேட்டுக் கொள்கிறேன். 

;