tamilnadu

img

முஸ்லிம் கவிதையை போதித்ததாக தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

பிலிபிட்
மகாகவி முகம்மது இக்பால் ஒருமுஸ்லிம் என்றும், அவரின் கவிதையை இந்துக் குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுக்கலாம் என்றும் கூறி உத்தரப்பிரதேசத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில், பிஷல்பூர் கல்வி அதிகாரி, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.இந்திய மகாகவிகளான ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதி வரிசையில், முகம்மது இக்பாலும் ஒருவராவார். நாட்டுப் பிரிவினையின் போது, இக்பால் வசித்துவந்த சியால்கொட் பகுதி, பாகிஸ்தானுக்குள் சென்றதால், இக்பாலும் பாகிஸ்தானியராகி விட்டார். முஸ்லிம் கவிஞராகவும் அடையாளமாகிப் போனார்.

ஆனால், இக்பால் அவர்களால் எழுதப்பட்ட “சாரே ஜகான் சே அச்சா,இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா” என்று தொடங்கும் பாடல்தான், 1947 ஆகஸ்ட் 15-இல், பிரிட்டிஷார் விரட்டியடிக்கப்பட்ட பின்னர், இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தபாடலாகும். மறைந்த பிரதமர் நேருவுக்கு விருப்பமான இந்த பாடல், இப்போதும் தேசப்பக்திக்கான பாடலாக இந்தியா முழுவதும் ஒலித்து வருகிறது.அத்தகைய சிறப்பு வாய்ந்த முகம்மது இக்பாலின் கவிதையை, உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தின் பிசல்பூர் பகுதி அரசு துவக்கப்பள்ளி ஒன்றில், அதன் தலைமை ஆசிரியரான புர்ஹான் அலி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சகிக்க முடியாத, விஸ்வஹிந்து பரிசத் அமைப்பினர், ஒரு முஸ்லிம் கவிஞரின் பாடலை, தலைமை ஆசிரியர் புர்ஹான் அலி, குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாட வைப்பதாக கல்வித்துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.பிஷல்பூர் பகுதி கல்வி அலுவலர் உபேந்திர குமாரும், விஎச்பிஅமைப்பின் புகாரை ஏற்றுக் கொண்டு, தலைமை ஆசிரியர் புர்ஹான் அலியை சஸ்பெண்ட் செய்துஉத்தரவிட்டுள்ளார்.

;