tamilnadu

img

பதஞ்சலியின் கொரோனா மருந்துக்கு அரசு தடை....

புதுதில்லி:
கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ்,அவருக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் ‘கொரோனில் அண்ட்  ஸ்வாசரி’ (Coronil & Swasari) என்ற ஆயுர்வேத மருந்தை ஹரித்வாரில் செவ்வாயன்று அறிமுகப்படுத்தினார்.

அப்போது தங்களின் இந்த மருந்தை, ஜெய்ப்பூரில் உள்ள தேசியமருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (National Institute of Medical Sciences- NIMS) உதவியுடன் 95 நோயாளிகள் மீது பரிசோதித்துப் பார்த்தபோது, 3 நாட்களில் 69 சதவிகித நோயாளிகளும், 7 நாட்களுக்குள்100 சதவிகித நோயாளிகளும் குணமடைந்து விட்டனர்” என்று கூறியிருந்தார்.30 நாட்களுக்கான இந்த ‘கொரோனில்’ மருந்தின் விலை ரூ. 545 மட்டுமேஎன்றும், இது ‘பதஞ்சலி’ ஷோரூம் களில் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவித்தார்.இந்நிலையில், பதஞ்சலி அதன் ‘கொரோனில் மருந்து’ தொடர்பான விளம்பரங்கள், அறிவிப்புகளுக்கு மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.“பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்துகண்டுபிடித்திருப்பதாக, சில நாட்களாகவே ஒரு செய்தி ஊடகங்களில்வெளியாவதை ஆயுஷ் அமைச்சகம்அறிந்தது. பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு வரும் விளம்பரங்கள் Drugsand Magic Remedies (Objectionable Advertisements) Act, 1954 என்ற சட்டத்துக்குக் கட்டுப்பட்டவை என்பதுஅந்நிறுவனத்துக்குத் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

மேலும், அந்நிறுவனம் சொல்லும்மருந்து என்ன; அதன் கூட்டுத்தன்மை என்ன; கொரோனாவுக்கு எதிரான இந்த மருந்தின் சோதனை எங்கே நடத்தப்பட்டது; இந்திய மருந்து சோதனைகள் பதிவு நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டதா; நிறுவன நெறிமுறைகள் குழுவின் அனுமதி பெற்றதா; மருந்தின் சேம்பிள் சைஸ் என்ன?இந்த மருந்து தொடர்பாக செய்யப்பட்டஆய்வு முடிவுகளின் தரவு அறிக்கைஆகியவற்றை விரைவில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
அந்த வகையில் சோதனைகள் முடிவுறாதவரை கொரோனாவுக்கு மருந்து என்ற விளம்பரங்களையோ, அறிவிப்புகளையோ ‘பதஞ்சலி’ நிறுவனம் நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.

;