tamilnadu

img

ஜிடிபி 5.5 சதவிகிதம் மட்டுமே... 2020-21 நிதியாண்டிலும் வளர்ச்சி வாய்ப்பில்லை!

புதுதில்லி:
மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், அவசர கதியிலான ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக, 2018-ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா கடுமையாக பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது.தனியார் முதலீடுகளில் சரிவு, உற்பத்தித் துறையில் மந்தநிலை, மக்களிடையே தேவைக் குறைவு போன்ற பல்வேறு காரணிகள் பொருளாதார மந்த நிலையுடன் சேர்த்துநாட்டை இக்கட்டில் தள்ளியிருக்கிறது. இதனால், 2019-20 நிதியாண் டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாகவும், ஜூலை - செப்டம்பர்காலாண்டில் 4.5 சதவிகிதமாகவும் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது.இந்நிலையில், 2020-21 நிதியாண்டிலும் பொருளாதார மந்தநிலை நீடிக்கும் என்று ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. 2019 - 20 நிதியாண்டின் முடிவில் 5 சதவிகித வளர்ச்சியையும், 2020-21 நிதியாண்டில் 5.5 சதவிகித வளர்ச்சியையும் இந்தியா கொண்டிருக்கும் என்று ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ கூறியுள்ளது. அதாவது பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்பதாக தெரி
வித்துள்ளது.

இந்தியாவானது, தற்போது பணவீக்கம், வராக் கடன்கள், தனியார் முதலீடுகளில் ஏற்பட்ட சரிவு என மூன்று பெரும் ஆபத்துகளை எதிர்கொண்டு இருப்பதாக ‘இந்தியாரேட்டிங்ஸ்’ நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் சுனில் சின்கா கூறியுள்ளார்.2020-21 நிதியாண்டில் சில்லரைப் பணவீக்கம் 3.9 சதவிகிதமாகவும், மொத்தவிலை பணவீக்கம் 1.3 சதவிகிதமாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ‘இந்தியா ரேட்டிங்ஸ்’, மக்களின் வருமானம் குறைந்திருப்பது, வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் பணப்புழக்கம் குறைந்திருப்பது பொருளாதார சரிவுக்கான முக்கிய காரணிகள் எனபட்டியலிட்டுள்ளது.தற்போதைய பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள், பணச் சுழற்சியை ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

;