tamilnadu

img

திருப்பதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது... 

திருப்பதி
நாட்டின் பிரசித்திபெற்ற வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. இந்த பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஏழுமலையான் கோவில் மண்டலத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அர்ச்சர்கள், தேவஸ்தான ஊழியர்கள், ஜீயர்கள் என 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி நகர் பகுதியில் கொரோனாவுக்கு பலர் பலியாகினாலும், கோவிலில் பணிபுரியும் கொரோனா நோயாளிகள் இதுவரை உயிரிழக்கவில்லை.  

இந்நிலையில் அங்கு முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம் இன்று (செவ்வாய்) முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 15 நாட்கள் முழுஊரடங்கு விதிக்கப்படுவதாகவும், காலை 6 மணி முதல் 11 மணிவரை மட்டுமே கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும். இந்த நேரத்தில் மட்டுமே மக்கள் வெளியில் நடமாட முடியும்.  மற்ற நேரங்களில் வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும் என சித்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

முழுஊரடங்கால் கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

;