tamilnadu

img

மத முழக்கங்களுக்கு மக்களவையில் இடமில்லை!

புதுதில்லி:
நாடாளுமன்றத்தில் மத அடிப்படையிலான முழக்கங்களுக்கு அனுமதி இல்லை என மக்களவையின் புதிய தலைவர் ஓம் பிர்லா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்கும்போது, பாஜக-வைச் சேர்ந்த எம்.பி.க்கள், ‘ஜெய் ஸ்ரீராம், பாரத்மாதாகீ ஜே’ என்ற மத அடிப்படை யிலான முழக்கங்களை எழுப்பிக் கூச்சலில் ஈடுபட்டனர்.பொறுத்துப்பார்த்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒருகட்டத்தில், “ஜெய் பீம், அல்லாஹூ அக்பர், தமிழ் வாழ்க,மார்க்சியம் வாழ்க, மதச்சார்பின்மை வாழ்க, பெரியார் வாழ்க, திராவிடம் வாழ்க” என்ற முழக்கங்களை எழுப்பி,பாஜக எம்.பி.க்களுக்குப் பதிலடி கொடுத்தனர். மம்தா கட்சி எம்.பி.க்கள் ‘ஜெய் காளி’ என்றனர்.இந்நிலையிலேயே, நாடாளுமன்றத்தில் மத அடிப்படையிலான முழக்கங்களுக்கு அனுமதி இல்லை என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கறாராக தெரிவித்துள்ளார்.

“முழக்கங்கள் எழுப்புவதற்கும், பதாகைகள் ஏந்துவதற்கும் அதற்கென தனியே வீதிகள் இருக்கின்றன. அங்கே போய் முழக்கமிடலாம். போராட்டம் நடத்தலாம். மத அடிப்படையிலான முழக்கங்களை எழுப்புவதற்கு மக்களவை ஒன்றும் வழிபாட்டுத் தலம் அல்ல. பதாகைகள் ஏந்துவதற்கும் மக்களவை சரியான இடம் அல்ல. மக்களவையில் விமர்சனங்களை முன் வைக்கவும், விவாதிக்கவும் மட்டுமே இடமுண்டு. 

அதேநேரம், எம்.பி.க்கள் எழுப்பும்கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. எம்.பி.க்கள்விவாதங்களை நடத்த கோரினால் அரசுஅதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிகளும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றன. அவர்கள் என் கடமையை செய்ய விடுவார்கள் என நம்புகிறேன். தற்போதைய அரசாங்கம் முழு பெரும்பான்மை பெற்றிருக்கிறது. அதனால் அரசுக்கும் இவ் விஷயத்தில் பொறுப்பு இருக்கிறது” என்று ஓம் பிர்லா கூறியுள்ளார்.

;