tamilnadu

img

உதவித்தொகை பெற ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

புதுதில்லி,அக்.9- விவசாயிகள் ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் புதனன்று தில்லியில் நடைபெற்றது. அதன் பிறகு பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமரின் கிசான்  சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க முடிவெடுத்து ள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தின்படி ஆண்டுக்கு ஆறா யிரம் ரூபாய் உதவித்தொகை பெரும் விவசாயிகள் சம்பா பருவ விதைப்பு க்கு முன்பாக பயன்பெறும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரகாஷ் ஜவடேகர், கிசான் திட்டத்தின் மூலம் 7 கோடி க்கும் அதிகமான விவசாயிகள் பயன டைந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல், இடம்பெயர்ந்த ஐந்தாயிரத்து 300 காஷ்மீரைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து  லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

;