tamilnadu

img

பொருளாதாரத் தேக்கம் உண்மைதான்.. பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகரும் ஒப்புக் கொள்கிறார்

புதுதில்லி:
“70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பணப்புழக்க நெருக்கடியில் இந்திய நாடு தள்ளப்பட்டுள்ளது; முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது” என்றுநிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் கூறியது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. மேலும்அது மோடி ஆட்சிக்கு எதிராக, தீ போலபரவியது. மத்திய பாஜக ஆட்சியில் நாடுபின்னோக்கிச் செல்வதற்கு, நிதி ஆயோக் அதிகாரி ராஜீவ் குமாரின் நேர்காணலே சாட்சி என்று எதிர்க்கட்சிகள் கூறின.இதனால், பதறிப்போன மத்திய அரசு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, “நாட்டின்பொருளாதாரம் சிக்கலில் இருப்பதாககூறுவதெல்லாம் தவறு; எல்லாம் சிறப்பாகவே உள்ளது” என்று முழுப்பூசணிக் காயையும் சோற்றுக்குள் மறைத்து, முதலீட்டை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் என்ற பெயரில், சில அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

பாஜக-வினரோ, நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை சமூகவலைத்தளங் களில் வேகவேகமாக பரப்பியதுடன், அதனை மறுக்கும் பொருளாதார வல்லுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீங்கள் கூறுவது மட்டும் உண்மை; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது பொய்யா? என்று மோதலில் இறங்கினர்.பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருப்பவர் ஷாமிகா ரவி. இவருடன், அத்வைத் என்ற ட்விட்டர் பயனாளிஒருவர், “பிரதமரின் பொருளாதார ஆலோசகரான நீங்களும் இந்திய பொருளாதாரத்தில், வீழ்ச்சி இருப்பதாக கருதுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.ஆனால், அவர் எதிர்பாராத வகையில், ஷாமிகா ரவியும் “இந்தியாவில் பொருளாதாரத் தேக்க நிலை இருப்பதுஉண்மைதான்” என்று பதில் போட்டு,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். “கட்டமைப்பு பொருளாதார மந்த நிலையை நாங்கள் (இந்திய நிதித்துறை) எதிர் கொண்டு வருகிறோம்” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.“தற்போதைய தேக்க நிலையை சமாளிக்க, அனைத்து அமைச்சகங்களுக்கும் இலக்கு நிர்ணயித்து தேசிய அளவிலான வளர்ச்சி திட்டத்தை வகுக்க வேண்டும்” என்ற வேண்டுகோள் ஒன்றையும்விடுத்துள்ள ஷாமிகா ரவி,“பொருளாதாரத்தில் பெரிய சீர்திருத்தங்கள் வேண்டும்” என்றும் “பொருளாதாரத்தை நிதி அமைச்சகத்திடம் மட்டும் விடுவது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைக் கணக்குத் துறையிடம் கொடுப்பது போலஉள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்தியா பொருளாதார மந்தநிலையைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக, சில நாட்களுக்கு முன்புதான், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருந்தார். இவர் மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர். பொருளாதார அறிஞராக கருதப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இதுதொடர்பாக எச்சரிக்கைகளை செய்திருந்தனர்.ஆனால், பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் ஷாமிகா ரவிஆகியவர்களே, நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டிருப்பது, பாஜக தலைமை மட் டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாமிகா ரவி, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக மட்டுமின்றி, ‘ப்ரோக்கிங்ஸ் இந்தியா திங்டேங்க்’ ஆய்வு நிறுவன இயக்குநராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவரான பிபெக் தெப்ராயின் கருத்தும் இதுவாக உள்ளது. பிபெக்தெப்ராய் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் (ஜிஎஸ்டி) இந்த பொருளாதார மந்த நிலை, மாறக்கூடியதா அல்லது கட்டமைப்பு சார்ந்ததா? என்பதை ஆலோசிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;