tamilnadu

img

யார் சொல்வதையும் கேட்காதீர்கள் ‘5 டிரில்லியனை’ தொட்டுவிடலாம்...!

பியூஷ் கோயலை சாடிய ப. சிதம்பரம்

புதுதில்லி, ஜன. 17 - உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’, சம்பவ் (SMBhav) என்கிற பெயரில் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான கூட்ட த்தை, கடந்த ஜனவரி 15, 16 தேதிகளில் தில்லியில் நடத்தியது. இந்த கூட்டத்தில் பேசிய அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், இந்தியாவில் சிறு - குறு தொழில்களை டிஜிட்டலைஸ் செய்ய 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தார்.  பின்னர், அமேசானின் இந்த முதலீடு குறித்துப் பேசிய பியூஷ் கோயல், “அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டால ரை முதலீடு செய்வதால், இந்தி யாவுக்கு எந்த ஒரு பயனும் இல்லை” என்று முகத்தில் அடித்தாற்போல கூறினார். இது தொழில்முனைவோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தொழில் முனை வோரின் அந்த முணுமுணுப்புக் களை எதிரொலிப்பதுபோல, காங்கிரஸ் மூத்தத்தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சரு மான ப. சிதம்பரம், பியூஷ் கோய லை பேச்சைக் கண்டித்துள்ளார். “முதலில் பொருளா தாரத்துக்கு ‘நோபல் பரிசு’ பெற்ற அபிஜித் பானர்ஜி சொல்வதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸைக் கண்டு கொள்ளவில்லை. மேற்கொண்டு கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை சொல்வதையும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா சொல்வதையும் பியூஷ் கோயல் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். இப்படியே யார் சொல்வதையும் கண்டு கொள்ளாமல் இருந்தால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்து விடலாம்” என்று சாடியுள்ளார்.
 

;