tamilnadu

img

‘செய் அல்லது செத்துமடி’

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (Quit India Movement) 1942 ஆகஸ்ட் 9 அன்று துவங்கிய மாபெரும் ஒத்துழையாமை இயக்கம் ஆகும். இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றியது. மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்று முழங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கடுத்த நாள் ஆகஸ்ட்  9, 1942 இல் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை பிரிட்டிஷ் அரசு சிறைப்பிடித்தது. இதற்குப் பின்னர் விடுதலைப் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்தது.  எனினும் ஓராண்டுக்குள் காலனிய அரசு இவ்வியக்கத்தை ஒடுக்கியது.

;