tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர்களுக்கு நடந்துசெல்வதை அனுமதிக்க வேண்டாம்

உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுதில்லி,மே 11- புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்துசெல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மாநிலங் களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் வருமானத்திற்கு வழியின்றி, உணவின்றி தவித்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூறு மைல்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதில் சிலர் சோர்வடைந்து உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கா பாத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்து  உறங்கிய புலம்பெயர் தொழி லாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி யதில் 16 பேர் பலியாகினர். இது நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோச னை மேற்கொண்டார்.

இதுதொடர்பாக மத்திய உள் துறை செயலாளர் அஜய் பல்லா,  மாநில அரசின் தலைமைச் செயலா ளர்களுக்கு மே 11 அன்று அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை கள் மற்றும் ரயில்வே தண்டவாளங்கள் வழியாக நடந்தே சொந்த ஊர் செல்லும் நிலைமை மிகப்பெரிய கவலையளிப்பதாக உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்து கள் மற்றும் ஷெராமிக் சிறப்பு ரயில்களின் இயக்கம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையிலும், ரயில் தண்டவாளங்களி லும் நடந்து சொந்த ஊர் செல்லாமல் இருப்பதை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும்.அப்படி யாராவது நடந்துசென்றால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி தங்குமிடம் ஏற்பாடு செய்து உணவு, குடிநீர் வசதிகளை செய்துத் தர வேண்டும். ஷெராமிக் ரயில் மற்றும் பேருந்துகளின் இயக்கத்திற்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;