tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தேவதாஸ் காந்தி நினைவு நாள்

தேவதாஸ் காந்தி என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார். இவர் 1900 மே22ல் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.

இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார்.

தேவதாஸ் காந்தி, காந்தியுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இராஜாஜியின் மகளான இலட்சுமி என்பவருடன் தேவதாஸ் காதல்வயப்பட்டார். இருவரின் பெற்றோரும் காதலர்களை ஐந்தாண்டுகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திருமணத்திற்குக் காத்திருக்குமாறு நிபந்தனை விதித்தனர். ஐந்தாண்டுகள் கழிந்தபின் 1933இல் இருவரின் பெற்றோரின் ஒப்புதலுடன் இவர்களின் திருமணம் நடந்தது. இவ்விருவருக்கும் இராசமோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, இராமச்சந்திர காந்தி, தாரா காந்தி பட்டாசார்ஜீ ஆகிய நான்கு குழந்தைகள் பிறந்தனர்.இவர் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் மறைந்தார்.

===பெரணமல்லூர் சேகரன்===
 

;