tamilnadu

img

ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி பாடங்கள் நீக்கம்...

புதுதில்லி:
கொரோனா தொற்று தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங் கள், கடந்த மார்ச் 16 முதல் மூடப்பட்டுள்ளன. ஜூனில் புதிய கல்வியாண்டு துவங்கியும் பள்ளிகளைத் திறக்க முடியவில்லை. எப்போது திறக்கப்படும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

இந்நிலையில், மாணவர்கள் மீதுஅக்கறை கொண்டவர்கள் போல, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரையிலான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவிகித பாடங்கள் குறைக்கப் படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். மிகவும் நல்லவர் போல, முக்கியப் பாடங்களை விட்டுவிடாத வகையில், இந்த குறைப்பு நடவடிக்கை அமையும் என்றும் கூறினார்.ஆனால், நரேந்திர மோடி அரசானது, பாடக்குறைப்பு என்ற பெயரில்‘முடிச்சவிழ்ப்பு’ வேலையை அரங்கேற்றியுள்ளது.சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், ‘ஜனநாயகம்’, ‘பன்முகத் தன்மை’, ‘பாலினம்’, ‘மதம்’, ‘சாதி’, ‘பிரபலமான போராட்டங்கள்’, ‘ஜனநாயகத்துக்கான சவால்கள்’ ஆகியவை தொடர்பான பாடங்களை அடியோடு நீக்கியுள்ளது.இதேபோல, 11-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், ‘கூட்டாட்சி’, ‘குடியுரிமை’, ‘தேசியவாதம்’, ‘மதச்சார்பின்மை’, ‘இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகங் களின் வளர்ச்சி’ ஆகிய தலைப்பிலான பாடங்களையும், 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், ‘பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு’, ‘இந்திய பொருளாதாரவளர்ச்சியின் மாறும் இயல்பு’, ‘இந்தியாவில் சமூக இயக்கங்கள்’, ‘பணமதிப்பு நீக்கம்’ உள்ளிட்ட தலைப்பிலானபாடங்களையும் நீக்கியுள்ளது.இந்த நீக்கப்பட்ட பாடங்கள், அகமதிப்பீட்டிலோ, ஆண்டு இறுதி பொதுத்தேர்விலோ கேள்வியாக இடம்பெறாது என்று கூறியுள்ளது.

;