tamilnadu

img

தில்லி வன்முறை வெறியாட்டம் பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் திடீர் இடமாற்றம்

பாஜக அரசின்  நடவடிக்கைக்கு கண்டனம்

புதுதில்லி,பிப்.27-  தில்லியில் வன்முறையை தூண் டும் வகையில் பேசிய பாஜக தலைவர் கள் மீது வழக்குப் பதிய உத்தர விட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்திற்கு திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மக்களை பிளவுபடுத்தும் வகை யில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மத வெறிக்கும்பல் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியாகினர். தில்லி வன் முறைகள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடம் பெற்ற  அமர்வு, பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகிய மூன்று பேர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்கு வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தர விட்டது.

இதைத்தொடர்ந்து உடனடியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து மத்திய அரசு அறி விக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் கொலிஜீயம் அமைப்பு நீதிபதி முரளி தர் மாற்றல் குறித்து பரிந்துரை செய்தி ருந்ததாக கூறப்படுகிறது. நீதிபதி எஸ். முரளிதர் புதன்கிழமை இரவே பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அறிவிக்கையை மத்திய சட்டத் துறை புதன்கிழமையன்று இரவே அவசர அவசரமாக வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின்படியே தில்லி உயர் நீதி மன்ற நீதிபதி எஸ். முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சமாளிப்புடன் தெரி வித்துள்ளார்.

சிபிஎம் கண்டனம்

நீதிபதி முரளிதரை இடமாற்றும்   உத்தரவை நிறுத்தி வைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது. தில்லி உயர்நீதி மன்ற பார் சங்கமும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டியுள்ளது.

நீதிபதி முரளிதரைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன்?

புதுதில்லி, பிப்.27- தில்லி வன்முறைச் சம்பவத்தில், பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனு ராக் தாக்குர், பர்வேஷ் வர்மா, அபே வர்மா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டவர், தில்லி உயர் நீதி மன்ற நீதிபதி முரளிதர்.  அதுமட்டுமல்ல, “தில்லி வன்முறை யில் 35 உயிர்கள் போயிருக்கும் நிலை யில், எப்ஐஆர் பதிவு செய்வதற்கு, நேரம் காலம் பார்க்க வேண்டுமா? இன்னும் எத்தனை உயிர்களை இழந்தால் எப்.ஐ.ஆர். பதிவு செய்வீர்கள்? நகரமே பற்றி எரிந்த பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்யப்படுமா?” என்று வழக்கு விசார ணையின் போது, மத்திய அரசை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த வர் நீதிபதி முரளிதர் ஆவார்.

ஆனால், அன்று நள்ளிரவே, நீதிபதி முரளிதரை, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்ட னத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தில்லி வன்முறைச் சம்பவத்தில், நீதி பதி முரளிதரின் விசாரணை, மத்திய அர சுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய பின்ன ணியிலேயே, இந்த இடமாறுதல் நடவ டிக்கையை அரசு கையில் எடுத்துள்ள தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  மத்திய அரசோ, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான், நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று சமாளித்துள்ளது. முரளிதர் இடமாற்றத்திற்கான பரிந்து ரையை, பிப்ரவரி 12-ஆம் தேதியே கொலீ ஜியம் அளித்து விட்டது உண்மைதான். ஆனால் அப்போதே கொலிஜியத்தில் இருந்த 5 நீதிபதிகள் இடமாற்ற முடிவை எதிர்த்தனர். உயர் நீதிமன்ற பார் அசோ சியேஷனும் பணியிட மாற்ற பரிந்துரை யை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய் தது. மத்திய அரசும் பணியிட மாற்ற அறி விப்பை ஒத்திவைத்தது.

ஆனால், தில்லி வன்முறை வழக்கில் நீதிபதி முரளிதர் மேற்கொண்ட விசா ரணை நெருக்கடியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவரைப் பழிவாங்குவதற்கு கொலீஜியம் பரிந்துரையை நேரம் பார்த்து மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தில்லி வன்முறை வழக்கு நீதிபதி முரளிதர் அமர்விடம் சென்றுவிடக் கூடாது என்று ஆரம்பம் முதலே மத்திய அரசு பதறியது. அதற்கு ஏராளமான கார ணங்கள் இருக்கின்றன. நீதிபதி முரளிதர், வழக்கறிஞராக பணியாற்றிய காலம்தொட்டு, பெரும் பாலும், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றவர். 1984-ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சி பெற்ற முரளிதர், போபால் எரிவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வும், நர்மதா ஆற்றில் அணைகள் கட்டும் போது வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் தில்லி உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வாதாடியவர். ஏழை மக்களுக்கு பல்வேறு வழக்குகளில் நீதி பெற்றுத் தந்தவர். 16 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணி யாற்றிய முரளிதர், 2006-ஆம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகும் உரிமை மறுக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் அவர் உறுதியாக இருந்தார். வன்முறை யால் பாதிக்கப்பட்டவர்கள், விசாரணை சிறைவாசிகள், மனநோயால் பாதிக்கப் பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர், பணி யிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் மற்றும் குடிசைவாசி கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு நபர் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தீர்ப்பு களை வழங்கினார்.

1984 சீக்கியர்க்கு எதிரான வன்முறை, உத்தரப்பிரதேச ஆயுத சட்ட வழக்கு, எல்ஜிபிடி உடல் உறவு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிந்துகொள்வதற்கான வழக்கு என பலவற்றில் நீதிபதி முரளிதர் அதிரடி யான தீர்ப்புகளை அளித்துள்ளார்.  “2002-இல் குஜராத்தில் நடந்த வன் முறை, 1993-இல் மும்பையில் நடந்த வன் முறை, 2008-இல் ஒடிசாவில் நடந்த வன் முறை, 2013-இல் முசாபர் நகரில் நடந்த வன்முறை போன்றவற்றில் எல்லாம், சில அரசியல்வாதிகள், பிரபலங்கள் குளிர் காய்கிறார்கள்” என்று சஜ்ஜன் குமார் வழக்கில் துணிச்சலுடன் குறிப்பிட்டார். “இந்தியாவில் நடக்கும் பல வன் முறைகள் தூண்டிவிடப்பட்டவைதான். ஆனால் இதைத் தூண்டிவிட்டவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். அரசியல் லாபங்களைப் பெறுகிறார்கள். அவர் களுக்கு எந்த சிக்கலும் இல்லை. இவர் கள்தான் இந்தியாவின் சட்டத்திற்கு எதி ரானவர்கள். இதுபோன்ற கிரிமினல்கள் இந்திய இறையாண்மையை கெடுக்கி றார்கள்” என்று மற்றொரு தீர்ப்பில் குறிப் பிட்டார். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை பலமுறை கண்டித்தி ருக்கிறார்.

அடிப்படையில், இவை அனைத் துமே ஆர்எஸ்எஸ் - பாஜக சித்தாந்தத் திற்கு எதிரானவை.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டம் நீதிபதி முரளி தரோடு நேரடியாக மோதியது எப்போது எனில், ‘பீமா கோரேகான்’ வழக்கில் சிலர் தவறாக கைது செய்யப்பட்டதை நீதிபதி முரளிதர் கண்டித்து உத்தரவிட்டு இருந் தார். இந்த வழக்கில் கைதான கவுதம் நவ்லவ்காவை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டார். மும்பை காவல் துறைக்கு கண்டனத்தையும் தீர்ப்பில் பதிவு செய்திருந்தார்.  நீதிபதி முரளிதரின் இந்த தீர்ப்பைக் கொச்சைப்படுத்தி, ஆடிட்டர் குரு மூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ்-காரர்கள் மோசமான கட்டுரைகளை எழுதினர். அப் போது குருமூர்த்திக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி முரளி தர் உத்தரவிட்டார். இது ஆர்எஸ்எஸ் தலைவர்களை ஆத்திரமடையச் செய்து விட்டது. முரளிதரை அவர்கள் மேலும் கடுமையாக விமர்சனம் செய்தனர். முரளி தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். மோடி அரசும், நீதிபதி முரளிதரை தில்லி உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்ற தொடர்ந்து முயற்சித்து வந்தது. கொலீஜியம் பரிந்து ரையையும் பெற்றது. 

ஆனால், அதற்கு உள்ளாகவே தில்லி வன்முறை வழக்கில், மீண்டும் நீதிபதி முரளிதரிடம் வசமாகச் சிக்கியது. தில்லி வன்முறை குறித்து ஹர்ஷ் மந்தர் என்ப வர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கை நீதிபதி முரளிதர் - தல்வாண்ட் சிங் அமர்வு அவசர வழக்காக செவ்வாயன்று நள்ளிரவு 12.40 மணிக்கு விசாரித்தது. அப்போதே அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது. மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, வழக்கை தள்ளிப்போட எவ்வளவு முயன்றும் நீதிபதி முரளிதர் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்நிலையில்தான், இனியும் முரளி தர் இந்த வழக்கை விசாரணை செய்வது தங்களுக்கு சரியாக இருக்காது என்று, பயந்துபோன மோடி அரசு, பிப்ரவரி 12-இல் அளிக்கப்பட்ட கொலீஜியம் பரிந்துரையை பயன்படுத்தி தந்திரமாக இடமாற்றம் செய்துள்ளது. அந்த உத்தர வில் தேதி கூட குறிப்பிடாமல் அவசரம் காட்டியுள்ளது.
 

 

;