புதுதில்லி, நவ. 23 - ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, நாட்டின் பாதுகாப்புத்துறைக்கான ஆலோசனைக்குழுவில், சேர்க்கப்பட்டுள்ளார். பரூக் அப்துல்லா இந்த குழுவில் இடம்பெறுவ தற்கு முற்றிலும் பொருத் தமானவரே. ஆனால், இதே மோடி அரசுதான், ‘பரூக் அப்துல்லாவால் பொதுப்பாதுகாப்புக்கு ஆபத்து’ என்று கூறி, அவரை கடந்த 3 மாத மாக, காஷ்மீரில் சிறை வைத்துள்ளது. அதாவது, ஒருவரை சிறைவைத்து விட்டு, பின்னர் அவரையே பாதுகாப்புத்துறைக்கான ஆலோசகராக பாஜக அரசு நியமித்துள்ளது.