சிபிஎம் அறிக்கை
புதுதில்லி, டிச. 21- தேசியக் குடிமக்கள் பதி வேட்டையும், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டையும் உட னடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: தேசியக் குடிமக்கள் பதி வேட்டையும், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டையும் மத் திய அரசு உடனடியாக ரத்து செய்து அறிவித்திட வேண்டும். நாட்டில் வட கிழக்கு மாநிலங்க ளுக்கு வெளியே இருக்கின்ற பத்து மாநிலங்களின் முதல்வர் கள், ஏற்கனவே தங்கள் மாநி லங்களில் தேசியக் குடிமக்கள் பதி வேட்டை அமல்படுத்துவதை எதிர்த்திருக்கிறார்கள். மேலும் பல முதல்வர்கள் இவர்களைத் தொட ரலாம். இத்தகு சூழ்நிலையில், மத் திய அரசாங்கத்தின் பிடிவாதப் போக்கு ஏற்கத்தக்கதல்ல.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ள குடியுரி மைத் திருத்தச் சட்டத்திற்கு எதி ராகவும், மற்றும் அதனுடன் சம் பந்தப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேடு/தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற் றிற்கு எதிராகவும் நடத்திவரும் கிளர்ச்சிப் போராட்டத்தை தொட ர்ந்திட வேண்டும் என்று மக்க ளைக் கேட்டுக் கொள்கிறது. பல இடங்களில் அமைதி யாகப் போராட்டங்களை மேற் கொண்டுள்ள கிளர்ச்சியாளர் களுக்கு எதிராக காவல்துறை யினர் அதீதமான முறையில் பலப் பிரயோகத்தைப் பயன்படுத்துவ தற்கும், கிளர்ச்சிப் போராட்டங்க ளுக்குத் தடை விதித்திருப்பதற் கும் கண்டனம் தெரிவித்துக் கொள் கிறது. வன்முறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளுக்கு இரையாக வேண்டாம் என்றும் மக்களை, அரசியல் தலைமைக் குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் கோரி யுள்ளது. (ந.நி.)