tamilnadu

img

வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள்... தமிழக அரசே பொறுப்பு: சிஐடியு

சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (65). இவருக்கு காளியம்மாள் (60) என்றமனைவி உள்ளார். கண் பார்வைக் கோளாறுகாரணமாக சின்னாளபட்டியில்  வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.  ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் மிகவும் வறுமையில் வாடி வந்தவர் தனதுமனைவியுடன் விஷம் அருந்தி தற்கொலைசெய்து கொண்டார். இவர்களது தற் கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஊரடங்கு காலத்தில் பல தொழில்கள்முடங்கி உள்ளன. ஆட்டோ தொழிலாளர்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். குறிப்பாக திருப்பூரில் வேலை இல்லாததால் அங்கிருந்து திரும்பிய ஒருவர், வேடசந்தூரில் தற் கொலை செய்து கொண்டார். சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். சின்னாளபட்டியில் கைத்தறி இல்லாததால் அவர்கள் வேலை இழந் துள்ளனர்தர்மராஜ் - காளியம்மாள் இறப்புக்குக்காரணம் வறுமையே. இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க அரசு அனைவருக்கும் மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும்.டெக்கரேசன் தொழில் செய்பவர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல வாரியத்தில் பதிவு செய்தால் ரூ.2,000 என்ற நிலைமாறி அனைவருக்கும் ரூ.2,000 கொடுக்கமுன்வர வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் தான் சிகைத் தொழிலாளர்களுக்கு வருமானமுள்ள நாளாகும். ஆனால் ஞாயிறுமுழு முடக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்படு கிறது. எனவே தர்மராஜ் - காளியம்மாள் போல் இன்னும் பலர் தற்கொலை செய்துகொள்ளாமல் அரசு பாதுகாக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;