tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது... 

தில்லி 
இந்தியாவில் கொரோனவை விரட்ட மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 17-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில் ஊரடங்கு சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலையில் 49 ஆயிரத்து 400 ஆக உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அசுர வேகத்தில் உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை ஆயிரத்து 600-யை தாண்டியது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 617 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பிலும் மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர். 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அதன் அண்டை மாநிலமான கோவாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து கோவா மாநிலம் விடுதலை அடைந்துள்ளது. ஏற்கெனவே மணிப்பூர், அருணாச்சலம்,திரிபுரா ஆகிய மாநிலங்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   

;