tamilnadu

img

காங்கிரஸ் முதல்வர்கள்  போராடாதது ஏன்? பிரசாந்த் கிஷோர் கேட்கிறார்

புதுதில்லி:
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, பினராயி விஜயன், மம்தா பானர்ஜி போன்ற மாநில முதல்வர்களெல்லாம் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் முதல்வர்கள் எங்கே போனார்கள்? என்று ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் கிஷோர்மேலும் கூறியிருப்பதாவது:“குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் முதல்வர்களேநேரடியாக தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மக்கள்பெரிய அளவில் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் வெறும் அறிக்கையை மட்டும் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.பிரியங்கா காந்தி மட்டுமே தில்லியில் நடைபெற்ற போராட் டத்தில் பங்கேற்றார். ஆனால் சோனியா காந்தி கூட அறிக்கை தான்வெளியிடுகிறார். ராகுல் காந்தியும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்தனர். ஆனால் மற்ற முதல்வர்களை போல அவர்கள் தெருவில்இறங்கி போராட தயக்கம் காட்டுகின்றனர்.” என்று கிஷோர் விமர்சித்துள்ளார்.

;