tamilnadu

img

காமிக் புத்தகமான ஜிஎஸ்டி விதிகள்

புதுதில்லி:
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகளை, காமிக் புத்தக வடிவத்தில் விளக்கும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறை, கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.இதன்மூலம் ஒரே பொருளுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், பொருட்களின் விலை குறையும் என்று மோடி அரசு கூறியது. எனினும், அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் ஆகியும், பொருட்களின் விலை குறையவில்லை- என்பது ஒருபுறமிருக்க, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறையும், இப்போது வரை வணிகர்களுக்கு குழப்பமாகவே உள்ளது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. விதிகளை விளக்கும் வகையில், காமிக் கதைகள் பாணியில் புத்தகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. “அட்வெஞ்சர்ஸ் ஆப் தி ஜி.எஸ்.டி. மேன்” என்ற தலைப்பிலான இந்த ஜிஎஸ்டி காமிக் புத்தகத்தை, ஸ்ரீநிவாஸ் கோட்னி என்பவர் எழுதியுள்ளார்.இதில், ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகள் மற்றும் விதிகள், சுருக்கமாகவும் நகைச்சுவையாகவும் கேலிச்சித்திரங்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளன. இத்தகவலை முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

;