tamilnadu

img

குடியுரிமைச் சட்டம்  சிக்கிமில் அமலாகாது.. கிரந்திகாரி மோர்ச்சாவும் பின்வாங்கியது

மணிப்பால்:
சிக்கிம் மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக-வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிக்கிம்கிரந்திகாரி மோர்ச்சாவின் தலைவரும், அம்மாநில முதல்வருமான பிரேம் சிங் தமாங் கூறியுள்ளார்.“அரசியலமைப்பின் 371 (எப்) பிரிவின் கீழ், சிக்கிம் மாநிலம் சிறப்புஅந்தஸ்தைப் பெற்றுள்ளதால், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் சிக்கிமில் நடைமுறைக்கு வராது” என்று மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா ஏற்கனவே தங்களுக்கு உறுதியளித்து இருப்பதாகவும்; எனவே, சிக்கிம் மாநில சட்டமன்றத்தால் ஒப்புதல் பெறும்வரை இந்த சட்டம் செயல்படுத்தப்படாது என்றும் தமாங் சமாளித்துள்ளார்.ஆனால், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் சிக்கிம் மாநிலத்தின்மக்கள்தொகையை மாற்றக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ள ஹம்ரோ சிக்கிம் கட்சியின் தலைவர் பாய்சுங் பூட்டியா, ஆளும்சிக்கிம் கிராண்டிகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) மத்தியிலும் மாநிலத்திலும் பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்என்று வலியுறுத்தியுள்ளார்.

;