tamilnadu

img

குளோரோகுயின் மாத்திரைகள் மூன்று கோடி இருப்பு உள்ளதாம்... மத்திய சுகாதாரத்துறை செயலர் திடீர் விளக்கம்

புதுதில்லி:
மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால்  வெள்ளியன்று புதுதில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: 

வியாழனன்று நடத்தப்பட்ட  16002 கொரோனோ சோதனையில  0.2 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. நாட்டில், இதுவரை சமூக பரவல் இல்லை, எனினும் மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகள் மூன்று கோடி இருப்பு உள்ளது. ஆனால் நமக்குத் தேவை ஒரு கோடி மாத்திரைகள் மட்டும்தான் என்றார்.

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு கொடுக்க ஒப்புக்கொண்ட நிலையில், குளோ குயின் மாத்திரையின் தேவை, இருப்பு குறித்து செய்தியாளர்களுக்கு தன்னிலை விளக்கமளித்தார்.தினம்தோறும் தவறாது செய்தியாளர்களை சந்தித்த அகர்வால் ஒரு நாள் கூட குளோரோ குயின் குறித்து வாய் திறந்ததில்லை. தற்போது அது டிரம்ப்பின் கைகளுக்கு சென்ற நிலையில் முதன்முறையாக அகல்வால் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 

;