tamilnadu

img

தஞ்சையில் இன்று சாதி ஒழிப்புப் பேரணி

தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாநில மாநாடு

தஞ்சாவூர், ஆக. 16- “சாதியம் தகர்ப்போம்;மனிதம் வளர்ப்போம்” என்ற முழக்கத்துடன், தஞ்சாவூரில் பேரெழுச்சி யுடன் துவங்கி நடைபெற்று வருகிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு, இன்று (ஆகஸ்ட் 17) பிரம்மாண்டமான பேரணி யுடன் நிறைவு பெறுகிறது. தஞ்சாவூரில் தோழர் அசோக் நினைவரங்கில் நடைபெற்று வரும் மாநில மாநாட்டின் நிறை வாக ஆகஸ்ட் 17 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் கரந்தை சிஆர்சி பணிமனை அருகி லிருந்து சாதி ஒழிப்பு பேரணி எழுச்சியுடன் துவங்குகிறது. இப்பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைக்கிறார். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரம் ஆயிரமாய் சாதி ஒழிப்புப் போராளிகள் இப்பேரணியில் பங்கேற்கின்றனர்.

சீத்தாராம் யெச்சூரி பேசுகிறார்

பேரணியின் நிறைவாக திலகர் திடலில் மாநிலத் தலைவர் பி.சம்பத் தலைமையில் நடை பெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி உரையாற்றுகிறார். கே.சாமுவேல் ராஜ், ஆர்.புண்ணியமூர்த்தி, கோ.நீலமேகம் உள்பட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

ஆகஸ்ட் 15 அன்று மாநாட்டை துவக்கி வைத்து ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு உரையாற்றினார். மேடையில் தலைவர்கள் (இடமிருந்து), கே.சாமுவேல்ராஜ், பி.சம்பத், எஸ்.கே.மகேந்திரன், கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம், கோ.நீலமேகம், யு.கே.சிவஞானம், ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்டோர்.