tamilnadu

img

அமைச்சரவை செயலருக்கு பதவி நீட்டிப்பு

புதுதில்லி:
மத்திய அமைச்சரவைச் செயலாளர் பிரதீப் குமார் சின்காவின் பதவிக்காலம் ஜூன் 12-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான அமைச்சரவை நியமனக் குழுவானது, சின்காவின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப் பட்ட பிரதீப் குமார் சின்காவுக்கு ஏற்கெனவே இரண்டு முறை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.