tamilnadu

img

2022-க்குள் புல்லட் ரயிலா? நாங்கள் எப்போது சொன்னோம்...

புதுதில்லி:
2022-ஆம் ஆண்டுக்குள் புல்லட் ரயில் ஓட வாய்ப்பில்லை என்றும், மேலும், இதுதொடர் பாக இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.2017 டிசம்பரில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் வர இருந்ததையொட்டி, வாக்குகளைக் கவர்வதற்காக, மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அறிவிக் கப்பட்டது. இது தனது கனவுத் திட்டம் என்று கூறிய மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை அழைத்து வந்து,2017 செப்டம்பரில் அடிக்கல் நாட்டினார். 2022-ஆம் ஆண்டிற் குள் புல்லட் ரயில் ஓடும் என்றும் மோடி அப்போது படோடோபமாக அறிவித்தார்.

ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு, 2 ஆண்டுகள் ஆகியும் நிலமெடுக்கும் பணிகள் கூட இன் றும் முடிவடையவில்லை. இந்நிலையில், மோடி அறிவித்தபடி, 2022-க்குள் புல்லட் ரயில்கள் ஓடுமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
அதற்கு மத்திய ரயில்வேஅமைச்சர் பியூஷ் கோயல், நாடாளுமன்றத்தில் பதிலளித்துள் ளார். அதில், “2022-ஆம் ஆண் டிற்குள் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவு செய்தாக வேண்டும் என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை” என்று ஒரேபோடாக போட்டுள்ளார்.மும்பை - அகமதாபாத் இடையிலான இந்த புல்லட் ரயில் திட்டம், ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், ரூ. 88 ஆயிரம் கோடியை, ஜப்பான் நாட்டின் சர்வதேச கூட்டுறவு முகமை (Japan International Cooperation Agency) கடனாக அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;