tamilnadu

img

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் டுவிட்டர் பதிவுகள் முடக்கம்..

புதுதில்லி:
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்குபவர்களில் பாஜக எம்.பி. தேஜஸ்வி முக்கியமானவர். இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு, தேஜஸ்வி சூர்யா கடந்த 2015-ஆம் ஆண்டு பதிந்த டுவிட்பதற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும்.“பயங்கரவாதத்துக்கு மதம் எதுவும் கிடையாது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஒரு மதம் உள்ளது. அதுபல நேரங்களில் இஸ்லாம் ஆக உள்ளது” என்பதுதான் அந்த டுவிட்டர் பதிவாகும்.

இதனிடையே தேஜஸ்வி சூர்யாவின் அந்த டுவிட்டர் பதிவை, பாஜகவினர் தற்போதைய கொரோனா காலத்தில் மீண்டும் சமூகவலைத்தளங்களில் பரப்பி வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கினர். இந்த வெறுப்புப் பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவும் போனது.ஒருகட்டத்தில் இந்த பதிவுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலகளாவிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக முஸ்லிம் நாடுகள் பலவும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தன. இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்களைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மறைமுகமாக இந்திய அரசுக் கான நெருக்கடியாகவும் இது மாறியது.இந்நிலையில். பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் டுவிட்டர் பதிவை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக டுவிட்டர் நிறுவனம்தெரிவித்துள்ளது.

;