tamilnadu

img

100 நாள் வேலைக்கு விண்ணப்பிக்கும் இளங்கலை, முதுகலை பட்டதாரிகள்....

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களாக இருந்த ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 30 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். 

சொந்த ஊர் திரும்பிய பலபட்டதாரி இளைஞர்கள், மகாத்மாகாந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 100 நாள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். நீர் நிலைகளை சீரமைப்பது, சாலைகளை செப்பனிடுவது போன்ற உடல்சார்ந்த உழைப்பிற்கு தயாராக உள்ளனர். பிபிஏ, எம்.ஏ., பி.எட்., பட்டம்பெற்றவர்களும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்காக காத்திருக்கின்றனர்.லக்னோவிலிருந்து சுமார் 150 கி.மீதூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ரோஷன் குமார் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதம் திட்டத்தின் கீழ் வேலைவேண்டுமென பதிவுசெய்துள்ளார். இவர் ஒரு எம்.ஏ.பட்டதாரி. ஊரடகங்கால் வேலையின்றி சொந்த ஊருக்கு வந்துவிட்டார். குளங்களை சீரமைப்பது, சாலைகளை சீரமைப்பது போன்ற வேலைகளை செய்யத் தயாராக இருப்பதாக அவர்கூறியுள்ளார்.

எம்.ஏ. பட்டதாரியான சுர்ஜித் குமார் கூறுகையில், “என்னிடம் எம்.ஏமற்றும் பி.எட் பட்டம் உள்ளது. நான் ஒரு வேலையைத் தேடுவதற்கு முன்புஊரடங்கு விதிக்கப்பட்டது. தற்போதுஇந்த வேலையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.சதேந்திரகுமார் என்ற இளைஞர் கூறுகையில், நான் ஒரு பி.பி.ஏ. பட்டதாரி. எனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு நிறுவனத்தில் ரூ. 6 ஆயிரம் ரூ. 7 ஆயிரம் பெறக்கூடிய நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். ஊரடங்கால் வேலைபோய்விட்டது. தற்போது எனக்கு 100 நாள் வேலை தான் எனக்கு கைகொடுத்துள்ளது என்றார்.ஜூனைத்பூர் கிராமத் தலைவர்கூறுகையில், “கொரோனா ஊரடங் கால் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் பட்டதாரி இளைஞர்கள் வரை100 நாள் வேலைக்கு விண்ணப் பித்துள்ளார்கள்” என்றார்.நாடு முழுவதும் 14 கோடி பேர்மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை வைத்துள்ளனர். அவர்களுக்கு 100 நாள் வேலைவழங்க மத்திய அரசிற்கு ரூ.2.8 லட்சம்கோடி தேவைப்படும். ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை கேட்டு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எத்தனை ஆயிரம் பேர் இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் எனத் தெரியவில்லை.

;