புதுதில்லி, டிச.10- “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. நம்முடைய சுதந்திர போராட்ட வீரர் களுக்கு அவமரியாதை செய்கிறது என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி கூறியுள்ளார். மேலும், “அமித்ஷா முன்மொழிந் துள்ள சட்டம், ஹிட்லரின் சட்டத்தை விட மோசமா னது. நியூரம்பெர்க் இனம் சட்டங்கள் மற்றும் இஸ்ரே லின் குடியுரிமைச் சட்டம் போன்றவற்றை கொண்டு வந்த ஹிட்லர் மற்றும் டேவிட் பென்-குரியனுடன் அமித்ஷாவின் பெயரும் இடம்பெறும்” என்றும் ஓவைசி சாடியுள்ளார்.