tamilnadu

img

5 ரபேல் போர்விமானங்கள் விமானப்படையில் இணைப்பு

அம்பாலா:
5 ரபேல் போர்விமானங்கள்  இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், அம்பாலா விமானப்படைத் தளத்தில் செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லே, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி ஆர்கேஎஸ். பகதூரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

5 ரபேல் விமானங்களுக்கும் அனைத்து மதத்தின் வழக்கப்படி, சர்வ தர்ம பூஜை நடந்தது. 5 விமானங்களும் விமானப்படையின் 17 படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் “ இந்திய விமானப்படை புதிய பறவைகளை வரவேற்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. 4 ஆண்டுகளுக்குப்பின்னர் 5 ரபேல் போர் விமானங்கள் வந்துள்ளன.

;