tamilnadu

img

ராணுவத்தில் தரைப்படையிலும் விமானப்படையிலும் கமாண்டர்களாக 26 ஆண்டுகள் பணி

அன்று


ராணுவத்தில் தரைப்படையிலும் விமானப்படையிலும் கமாண்டர்களாக 26 ஆண்டுகள் பணியாற்றினால் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கப்பற்படையில் கமாண்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாத பாரபட்சம் நீடித்து வந்தது. அவ்வாறு பணியாற்றி வந்த 702 அதிகாரிகளில் 282 பேர் உரிய பயன்களை பெறாமலே ஓய்வு பெற இருந்தது குறித்து 2009 அக்டோபரிலும், 2010 ஜனவரியிலும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு கடிதம் எழுதினார். அதில் பாரபட்சமான இந்த நிலைபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வலியுறுத்தினார். அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஏ.கே.அந்தோணி பதில் அளித்திருந்தார்.


இன்று


ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மனக்குமுறலோடு சமூக ஊடகத்தில் பதிவிட்ட ராணுவ வீரர் பழிவாங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களது குறைகளை கூறும் வாய்ப்புகூட மோடி அரசால் மறுக்கப்படுகிறது.‘ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் சிகிச்சைக்கு உதவுங்கள்’ இதுஇந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரின் டுவீட்டர் பதிவு. அதில், இவர்தான் பீதாம்பரன். இந்திய ராணுவத்தில் 1965 முதல் பணியாற்றி 1971 போரில் ஈடுபட்டுள்ளார். இவரது அடையாள அட்டை மூலம் ராணுவ வீரர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய ராணுவத்தை அணுகி அவரால் உதவி பெற முடியவில்லை’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.