tamilnadu

img

தில்லியில் 122 வீடுகள், 301 வாகனங்கள் எரிப்பு.... முதலாவது இடைக்கால அறிக்கையில் தகவல்

புதுதில்லி:
தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது, பாஜக-வினர் பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். 3 நாட்கள் வரை நீடித்த வன்முறையில் 47 பேர் வரை கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.வீடுகள், வணிக நிறுவனங்கள்,வாகனங்கள் தீவைத்து எரிக்கப் பட்டன. வழிபாட்டுத் தலங்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டன. 

இறந்தவர்களை முழுமையாக அடையாளம் காணும் பணியும், வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக் களின் மதிப்பு பற்றிய கணக்கெடுப்பும், அரசு மற்றும் தனியார்துறைகள் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், சேதப்படுத் தப்பட்ட சொத்துக்கள் பற்றிய, முதலாவது, இடைக்காலஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “தில்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 122 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. அந்த 122 வீடுகளும்முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டன. 322 கடைகள் தீ வைத் தும், அடித்து நொறுக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 4 சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 301 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வன்முறை தொடர் பாக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், இதுவரை 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் 18 குழுக்கள் ஆய்வு செய்து இந்த இடைக்கால சேத விபரங்களை அளித்துள்ளன. இந்தவார இறுதிக்குள் சேத மதிப்பீடுமுழுவதும் நிறைவு பெற்று விடும்என்றும் அந்தக் குழுக்கள் கூறியுள்ளன.

;