tamilnadu

போலியோ மருந்து தட்டுப்பாடு இல்லை: மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

 புதுதில்லி,மே 19- 9 கோடி குழந்தைகளுக்கு ஜூன் மாதத்தில் சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. இதற்கான சொட்டு மருந்து,உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரத நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் கழகம் மூலம் தயாரிக்கப்படுகின்றன. ஆனால்இதில் தயாரிக்கப்பட்ட 30 ஆயிரம் சொட்டு மருந்து குப்பிகள்,தரமற்றவை என்பதை பாரத நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்கழகம் கண்டுபிடித்தது. இதனால் போலியோ ஒழிப்பு நட வடிக்கைக்கு பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், அடுத்த நான்கு மாதங்களுக்குத் தேவையான போலி யோ சொட்டு மருந்து கையிருப்பு உள்ளதாகவும் தரமற்ற சொட்டு மருந்து பயன்படுத்தப்பட வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

;