tamilnadu

கொரோனா தமிழக மருத்துவமனை நிலை மோசம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதுதில்லி, ஜூன் 13- கொரோனா நோயாளிகள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டுள்ள உச்சநீதிமன்றம் மத்திய அரசு, தமிழகம் உள்பட நான்கு மாநி லங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கொரோனா  தொற்றால் உயிரி ழந்தவர்களின் உடல்களை இறு திச்சடங்கின்போது மனிதநேயமற்று கையாண்டு வீசி எறிதல், நோயாளி களை மரியாதைக் குறைவாக நடத்து தல் தொடர்பான செய்திகள் வெளி யாகின. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்க றிஞருமான அஸ்வானி குமார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி க்குக் கடிதம் எழுதி கொரோனா நோயா ளிகள் மோசமாக நடத்தப்படுவது குறித்தும், உயிரிழந்தவர்களி்ன் உடல்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வில் வெள்ளியன்று விசாரித்தது. கொரோனா நோயாளிகள் மோச மாக மருத்துவமனைகளில் நடத்தப் படுவது குறித்தும், கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மரியாதைக்குறைவாக கையா ளப்படுவது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள், பல மாநில அரசு மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். கொரோனாவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதைப் பார்க்கிறோம். கொ ரோனா நோயாளிகள் நாள்தோறும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைக் கவனிக்கக்கூட ஒரு வரும் இல்லை. தில்லியில் உள்ள மருத்துமனை நிலவரத்தைச் சொல்லவே வருத்த மாக இருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உயிரிழந்தவர்களின் உடலைக் கையாளுதல் போன்றவை கவலையளிக்கும்விதமாக இருக்கின்றன. கொரோனாவால் ஒரு நோயாளி இறந்துவிட்டால், அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்தாருக்கூட தகவல் சொல்வதில்லை. சில நேரங்க ளில் நோயாளியின் உறவினர்களைக் கூட இறுதிச்சடங்கில் பங்கேற்க அனு மதிப்பதில்லை. தில்லி மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக இருந்தும், மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர நோயாளிகள் அலைபாய்கிறார்கள். தில்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல்கள், நடை பாதையிலும், காத்திருப்பு அறை யிலும் வைக்கப்பட்டுள்ளது. பெரும் பாலான படுக்கைகள் காலியா கவே இருக்கின்றன. ஆனால், கொ ரோனவில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அனுமதிப்பதில்லை.

ஒரு மாநில அரசின் கடமை என்பது நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகளை மட்டும் உரு வாக்குவது அல்ல, மருத்துவ கட்ட மைப்பு, மருத்துவர்கள், ஊழியர்கள் அனைத்தையும் ஏற்படுத்த வேண்டும். தில்லி மருத்துவமனைகள் மட்டு மல்ல மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகத்தில் உள்ள மருத்துவ மனைகளில் கூட மோசமான நிலைதான் நிலவுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் எந்த அளவுக்கு உள்ளன என கேள்வியயெழுப்பிய நீதிபதிகள் தில்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவ மனையின் நிலை என்னவென்றால், அங்கு 200 படுக்கைகள் உள்ளன. 17 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். எஞ்சியுள்ள படுக்கைக ளில் நோயாளிகள் அனுமதிக்கப் படவில்லை. குறிப்பாக இறந்த நோயாளிகளின் சடலங்கள் தில்லி,  உத்தரப்பிரதேச மருத்துவமனைகளால் அகற்றப்பட்ட விதம் மிகவும் “இழிவானது” எனக் கூறிய நீதிபதிகள் தமிழகம், தில்லி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்க மாநி லங்களில்  மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உபகர ணங்கள் போதுமான அளவு இருக்கி றதா என்பதை விளக்க நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்  மத்திய அரசும் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு  வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

;