மகாகவி சுப்பரமணிய பாரதியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தாகோவிலில் அமைந் துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தமுஎகச வின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் பாவலர் சண்முகசுந்தரம், புதுச்சேரி நிர்வாகி கள் ராம்ஜி, பாஸ்கர், மகாலட்சுமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று பாரதியார் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.