tamilnadu

img

மத்திய பாஜக அரசை கண்டித்து சுதேசி பஞ்சாலை எதிரில் புதுச்சேரி ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து அரசியல் அமைப்பு சட்டம் 370 மற்றும் 35ஏ பிரிவை அவசர, அவசரமாக நீக்கிய மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத் தலைவர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தலைமை  தாங்கினார். பொதுச் செயலாளர் ஜீவானந்தம், சிபிஎம் மூத்த தலைவர் தா.முருகன், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம்,  திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., சிபிஐ முன்னாள் மாநிலச் செயலாளர் நாரா.கலைநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.