புதுச்சேரியில், மேலும் 9 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், நேற்றைய நிலவரப்படி கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. இதில் 38 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 17 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், சேலம், சென்னையில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் புதிதாக வில்லியனூர், கொம்பாக்கம், சுதானா நகர், விவிபி நகர், பூரணாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அரசு மருத்துவமனையிலும், மற்ற 8 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.