புதுச்சேரி, ஆக. 2- புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,806ஆக அதிக ரித்துள்ளது. புதுச்சேரியில் 161 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும், ஏனாமில் 32 நபர்களுக்கும் ஞாயிறன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,309 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பங்கு ஊரைச் சேர்ந்த 65 வயது மிக்க முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநி லத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.