tamilnadu

img

புதுச்சேரி துணை சபாநாயகராக எம்.என்.ஆர் பாலன் தேர்வு

புதுச்சேரி துணை சபாநாயகராக,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  எம்.என்.ஆர். பாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் காலியாக உள்ள சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை (5-09-19) நடைபெறவுள்ளதாகவும், போட்டியிட விரும்புவோர் இன்று பகல் 12 மணிக்குள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டுமென சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார்.

இந்நிலையில், துணை சபாநாயகர் பதவியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதை அடுத்து, வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நேரமான பகல் 12 வரை வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை பதவியேற்க உள்ளார். 
 

;