tamilnadu

img

அமலோற்பவம் பள்ளி தொடர்ந்து சாதனை

புதுச்சேரி, மே 3-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் 792 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் லூர்துசாமி பாராட்டினார். தொடர்ந்து 26 ஆவது ஆண்டாக இப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இப் பள்ளியில் சிறப்பிடம் பிடித்த அர்சினிக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்றும் மேலும் உயர் கல்வி இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளியின் தாளாளர் லூர்துசாமி தெரிவித்தார்.