tamilnadu

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி, மே 27-புதுவையில் உயர்த்தப் பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச் சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.கோவா மாநிலம் மற்றும் புதுவை உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் என்ற அமைப்பு உள்ளது.இந்த ஆணையத்திடம் ஆண்டுதோறும் யூனியன் பிரதேச அரசுகள் புதிய நிதி ஆண்டுக் கான மின்சார வினியோகம் தொடர்பாக வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்.இதன் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்தவும் அனுமதி கோரப்படும். கடந்த ஜனவரி மாதம் புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர் பாக கலந்தாய்வு கூட்டம் நடந் தது. இந்த கூட்டத்தில் மின் கட்டணம் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என முடிவு செய் யப்பட்டது. இதனால் புதுவையில் மின் கட்டணம் உயரவில்லை.இந்த நிலையில் புதுவையில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப் பட்டுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.59 விழுக்காடு வரை மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. அதே போல் தற்காலிகமான துணை கூடுதல் கட்டணம் 4 விழுக்காடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோக பயன் பாட்டுக்கு தற்போது ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, யூனிட்டுக்கு ரூ.1.50 ஆக உயர்த்தப்படுகிறது.அதேபோல் 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட் டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்கிறது.வர்த்தக பயன்பாட்டுக்கு நிரந்தர கட்டணம் ரூ.120 சேர்த்து 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.15-ல் இருந்து ரூ.5.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.15-ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 6.85-ல் இருந்து ரூ.7.20 ஆகவும் அதிகரிக்கிறது.குடிசை தொழில் பயன் பாட்டுக்கு ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.1.30-ல் இருந்து ரூ.1.50 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்த் தப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக முதலமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது, புதுவையில் உயர்த் தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது சம் பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து பேசி விட்டு கட்டண குறைப்பு முடிவை அறிவிப் போம்” என்றார்.

;