tamilnadu

img

பாரம்பரிய கிட்டிப்புள் போட்டி 

பொன்னமராவதி, ஆக.25- நேரு யுவ கேந்திரா புதுக்கோட்டை மற்றும் அக்னி சிறகுகள் விளையாட்டு மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வட்டார அளவிலான பாரம்பரிய கிட்டிப்புள் போட்டி, பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. போட்டியை கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சி தலைவர் ப.முருகேசன் தொடங்கி வைத்தார். ஊர் அம்பலம் மாரியப்பன், பூசாரி அழகப்பன், மோகன் கிடாய்வெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 12 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசை வட்ட ஊரணி அணியினரும், இரண்டாம் பரிசை அக்னி சிறகுகள் அணியினரும், மூன்றாம் பரிசை உலகம்பட்டி அணியினரும் பெற்றனர். அவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய இளையோர் தொண்டர்கள் ரம்யா, லோகு, புவனேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை வழி நடத்தினர்.